இதுக்காக தான் இத்தனை நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தோம்! இனிப்பான செய்தியை சொன்ன Samsung.!
சாம்சங் நிறுவனம் 4ஜி போன்களை விட 5ஜி போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் சமீபத்தில் சில 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதாவது இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி (Samsung Galaxy F54 5G) எனும் ஸ்மார்ட்போனை வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். இந்நிலையில் புதிய கேலக்ஸி எப்54 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.
குறிப்பாக எக்ஸிநோஸ் 1380 சிப்செட் வசியை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்.
8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போன் குறைந்த எடையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
5ஜி, வோல்ட்இ, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாம்சங் 5ஜி போன் ரூ.26,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








