Home
Mobile

மிட்-ரேன்ஞ் விலையில் நைட்கிராஃபி வருதா? கேமராவில் சம்பவம் பண்ணும் Samsung Galaxy F54

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் பிரீமியம் போன்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய நைட்கிராஃபி (Nightography) அம்சத்துடன் மிட்-ரேன்ஞ் விலையில் மார்க்கெட்டில் களமிறங்க காத்திருக்கிறது சாம்சங் கேலக்ஸி எஃப்54 5ஜி (Samsung Galaxy F54 5G). இது மட்டுமல்லாம், 108 எம்பி மெயின் கேமரா, 6,000mAh பேட்டரி என மற்ற அம்சங்களிலும் பட்டையை கிளப்புகிறது. இதுகுறித்த விவரங்கள் இதோ.

சாம்சங் கேலக்ஸி எஃப் சீரிஸ் (Samsung Galaxy F Series) வரிசையில் சாம்சங் கேலக்ஸி எஃப்54 5ஜி போன் சாம்சங் யூசர்கள் இடையே மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. ஏனென்றால், இந்த போன் பீரிமியம் போன்களில் வரும் பெரும்பாலான அம்சங்களை மிட்-ரேன்ஞ் விலையிலேயே கொண்டிருப்பதால், சாம்சங் யூசர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நைட்கிராஃபி கேமராவுடன் சம்பவம் பண்ணப்போகும் Samsung Galaxy F54

பொதுவாக, ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையாகும் சாம்சங் போன்களில் மட்டுமே சூப்பர் ஸ்டடி ஓஐஎஸ் (Super-Steady OIS), நைட்கிராஃபி அம்சங்கள் கொடுக்கப்படும். அந்த வகையில், சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra), சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் (Samsung Galaxy S22+) உள்ளிட்ட சில போன்களில் மட்டும் இவை இருக்கிறது.

இந்த அம்சங்கள் மூலம் நைட் டைம் போட்டோகிராபி அனுபவம் வேற லெவலில் கிடைக்கும். இப்படிப்பட்ட அம்சங்கள் மிட்-ரேன்ஞ் விலையில் கிடைத்தால் சொல்லவா வேண்டும். இந்த போனின் வெளியீட்டு தேதியை சாம்சங் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. ஆனால், இதன் அம்சங்கள், விலை குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. இப்போது, சூப்பர் ஸ்டடி ஓஐஎஸ், நைட்கிராஃபி அம்சங்கள் உடன் பல அம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அவை பின்வருமாறு.

சாம்சங் கேலக்ஸி எஃப்54 5ஜி அம்சங்கள்: இந்த சாம்சங் போன் 6.7 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என 2 வேரியண்ட் இருக்கிறது. ஆண்டிராய்டு 13 (Android 13) உடன் எக்ஸினோஸ் 1380 எஸ்ஓசி (Exynos 1380 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

108 எம்பி ஓஐஎஸ் (OIS) மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் (ultra-wide lens) + 2 எம்பி சென்சார் (sensor) உடன் டிபிள்லேயர் செட்டப் கொண்டுள்ளது. செல்பீ கேமரா 32 எம்பியாக உள்ளது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் 6,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்54 போனின் விலையை பொறுத்தவரையில் ரூ.33 ஆயிரத்துக்கு விற்பனையாக வாய்ப்புள்ளது.

இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F54 5G key specifications and photos tipped again: Here is all details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X