சாம்சங் கேலக்ஸி எஃப் 52 5ஜி இப்படிதான் இருக்கும்: சுமார் ரூ.23,000 விலையில்!
சாம்சங் கேலக்ஸி எஃப் 52 5ஜி ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் ஆன்லைனில் அதன் விலைக் குறியுடன் கசிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீன மைக்ரோ பிளாக்கிங் வலைதளமான டிப்ஸ்டர் விலையுடன் ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. இந்த படத்தின் தகவலின்படி இது குவாட் ரியர் கேமரா அமைப்பு, செல்ஃபி கேமராவுக்கான துளை பஞ்ச் ஹோல் கட்அவுட் அம்சத்தோடு வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனானது கூகுள் ப்ளே கன்சோல் மற்றும் சீனாவில் டெனாசான்றிதழ் பட்டியல்களில் காண்பிக்கப்படுகிறது.கேலக்ஸி எஃப் 52 5 ஜியின் இந்த கூறப்படும் படங்கள் கூகிள் பிளே கன்சோல் மற்றும் சீனாவின் டெனா சான்றிதழ் பட்டியல்களில் நாம் முன்பு பார்த்தவற்றுடன் பொருந்துகின்றன. சாம்சங் கேலக்ஸி எஃப் 52 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.22,900 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கசிவு விலை சாத்தியமானதாகவே இருக்கிறது.

டிப்ஸ்டர் தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி எஃப் 52 5ஜி ஸ்மார்ட்போன் மேல் வலது மூலையில் துளை பஞ்ச் கட்அவுட் வடிவமைப்போடு வரும் எனவும் இதன் பின்புறத்தில் செவ்வக கேமரா வடிவமைப்போடு குவாட் ரியர் கேமரா அமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது யூஎஸ்பி டைப் சி போட் ஆதரவோடு வருகிறது.
சாம்சங் கேலக்ஸி எஃப் 52 5ஜி ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், ப்ளூடூத் வி5.1, 25 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வரும் எனவும் 8ஜிபி ரேம் அம்சத்தோடு வரும் எனவும் கூறப்படுகிறது. இதில் 128ஜிபி உள்சேமிப்பு வசதியோடு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் இது 8 ஜிபி ரேம் உடன் வரும் எனவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ82 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. கேலக்ஸி குவாண்டம் 2 ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் கொரிய சந்தையில் அறிமுகம் செய்தது. மேலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் கேலக்ஸி ஏ82 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது அதிக எதிர்பார்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

சாம்சங் கேலக்ஸி ஏ82 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் QHD+ AMOLED டிஸ்பிளேவடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ82 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 10எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications