ஓஹோ., இந்த ஸ்மார்ட்போன் இப்படிதான் இருக்குமா?- சாம்சங் கேலக்ஸி எஃப் 52 5ஜி லுக்!

|

சாம்சங் கேலக்ஸி எஃப் 52 5ஜி ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்போடு உடனான செவ்வக வடிவ கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படும்படியான தகவல் லீக்காகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 52 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஃப் 52 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஃப் 52 5ஜி ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்போடு உடனான ஃபிளாஷோடு கொண்ட செவ்வக வடிவ கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படும்படியான தகவல் லீக்காகியுள்ளது.

புதிய 5ஜி அம்ச ஸ்மார்ட்போன்

புதிய 5ஜி அம்ச ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் புதிய 5ஜி அம்ச ஸ்மார்ட்போனை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஃப் 52 5ஜி சாதனத்துக்கான பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ அறிமுகத்துக்கு முன்னதாக இதன் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

கூகுள் ப்ளே கன்சோல் பட்டியல்

கூகுள் ப்ளே கன்சோல் பட்டியல்

ஸ்மார்ட்போன் கண்ணாடி குறித்து கூகுள் ப்ளே கன்சோல் பட்டியலில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் 1080x2009 பிக்சல்கள் தீர்மானம், 450பிபிஐ பிக்சல் அடர்த்தி உடனான முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறனோடு வருகிறது. இருப்பினும் திரையின் சரியான டிஸ்ப்ளே அளவு குறிப்பிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 750 எஸ்ஓசி ஆக்டோகோர் சிப்செட் மற்றும் அட்ரினோ 619 ஜிபியூ மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 11 இயக்கமுறை

ஆண்ட்ராய்டு 11 இயக்கமுறை

அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 இயக்கமுறையோடு வரும் என பட்டியல் தகவல் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மூலம் இயக்கப்படும் என கூறப்பட்டாலும் இது ஒரு வேரியண்டாகவே கருதப்படுகிறது வேறு ரேம் தகவல் வெளியாகவில்லை.

முக்கிய விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் குறித்து முன்னதாக டீனா-வில் மாதிரி எண் SM-E5260 உடன் காணப்படுகிறது. இதில் சாம்சங் கேலக்ஸி எஃப்52 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் லீக்காகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4350 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும் என கூறப்பட்டது. அதோடு இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்பி குவாட் கேமரா அமைப்போடு செவ்வக தொகுதியில் வைக்கப்பட்டிருக்கும் எனவும் இது ஃபிளாஷ் உடன் வரும் எனவும் கூறப்படுகிறது.

6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

அதேபோல் ஒரு பட்டியலில் இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் 1,080x2,408 பிக்சல்கள் டிஎஃப்டி டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒன்யூஐ3.1-ஐ அடிப்படையாகக் கொண்டு 8ஜிபி ரேம் உடன் வரும் என கூறப்படுகிறது. மேலும் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் செயலி மூலம் இயக்கப்படும் எனவும் இதில் மெமரி விரிவாக்க வசதிக்கு 128ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு டிஸ்ப்ளேவில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கும்.இந்த ஸ்மார்ட்போனின் எடை 199 கிராம் உடன் இருக்கும் எனவும் அடர் ப்ளூ, ஆஷ், வெள்ளை வண்ண விருப்பங்களில் வரும் என கூறப்படுகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F52 5G May launching With Quad Rear Camera Setup: Key Specs Leak

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X