ரொம்ப ஸ்லிம்மா இருக்கும்- செப்., 29 வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி!
சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 29 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எஃப் சீரிஸில் உள்ள முதல் 5ஜி ஸ்மார்ட்போனில் இடம்பெறும் சில அம்சங்கள் தகவல்களாக வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு ரேட்டிங் டிஸ்ப்ளே உடன் முவு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் இது வரும் எனவும் கூறப்படுகிறது. இது மூன்று பின்புற கேமரா அமைப்போடு, 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5ஜி
சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5ஜி ஸ்மார்ட்போனானது செப்டம்பர் 29 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை தளங்களிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் வெளியிட்ட மைக்ரோசாப்ட் தளத்தில் இடம்பெற்ற புகைப்படங்களில் சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5ஜி ஸ்மார்ட்போனானது பிளாக் மற்றும் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. சாதனத்தின் விலை குறித்த தகவல் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5ஜி: அம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5ஜி ஸ்மார்ட்போனானது முழு எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி=வி டிஸ்ப்ளே உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த சாதனம் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே காட்சியுடன் வரும் என கூறப்படுகிறது. மேலும் இதில் செல்பி கேமராவுக்கு டிஸ்ப்ளேவில் வாட்டர் டிராப் நாட்ச் விகிதத்துடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த 5ஜி ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் சதுர வடிவில் பொருத்தப்பட்ட கேமரா அமைப்பு கொண்டிருக்கும் எனவும் மூன்று கேமராக்கள் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த கேமரா அமைப்பின் மிகப்பெரிய அம்சமானது இதன் நைட் மோட் அம்சங்கள் ஆகும். இதில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா இருக்கும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் இதில் இடம்பெறும் பிற கேமரா சென்சார்கள் குறித்த விவரங்கள் சரியாக தெரியவில்லை. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் இதன் பேட்டரி ஆயுள் ஒரு நாள் முழுவதுமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஆற்றல் பட்டனில் கைரேகை ஸ்கேனர்
மைக்ரோசாப்ட் வெளியிட்ட தகவல்களின்படி, சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5ஜி ஸ்மார்ட்போன் வால்யூம் ராக்கர் மற்றும் வலது பக்கத்தில் பவர் பட்டனை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் ஆற்றல் பட்டனில் பாதுகாப்பு அம்சத்துக்கு கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கும் எனழும் கூறப்படுகிறது. இணைப்பு ஆதரவுகளாக மைக்ரோஃபோன், யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் ஸ்பீக்கர் கிரில் ஆகிய வசதியும் உண்டு. சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5ஜி ஸ்மார்ட்போனை தவிர சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

பரந்த அளவிலான 5ஜி பேண்டுகள்
கேலக்ஸி எஃப் 42 5 ஜி ஸ்மார்ட்போன் தவிர, சாம்சங் கேலக்ஸி எம் 52 5 ஜி ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். சாம்சங் கேலக்ஸி எம் 52 5 ஜி அறிமுகம் செப்டம்பர் 28 அன்று நடைபெறும் என கூறப்படுகிறது. அறிமுகத்திற்கு பிறகு ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை தளங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம் 52 5 ஜி சாதனம் மெல்லிய மற்றும் நீடித்த ஆதரவோடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது கேலக்ஸி எம் 55, சாம்சங் கேலக்ஸி எம்51 ஆகிய சாதனங்களை விட 21% மெலிதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் 5ஜி பயன்பாட்டுக்கு பரந்த அளவிலான 5ஜி பேண்டுகளை வழங்குகிறது. இந்த சாதனம் சிறந்த காட்சி மற்றும் மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications