விரைவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி F42 5G ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மாரட்போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும்
என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பதால் சியோமி, சாம்சங், ரியல்மி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. மேலும் கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் கூட 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 1,080x2009 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக பயன்படும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு இந்த புதிய கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

புதிய கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.
சாம்சங் கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் மூன்று கேமரா வசதிகள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே தனித்துவமான கேமரா வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.
இந்த கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போன்
வெளிவரும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக சாம்சங் நிறுவனம் கடந்த சில மாதங்களாக 5ஜி ஸ்மார்ட்போன்களை அதிகம் அறிமுகம் செய்து வருகிறது. இன்று கூட தரமான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.
சமீபத்தில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த சாதனம் சற்று உயர்வானவிலையில் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன் ஆனது. 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ்
சூப்பர் AMOLED Infinity-O வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் One UI 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன். சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் + 5எம்பி டெலிபோட்டோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications