சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5ஜி விரைவில்- இந்த அம்சங்கள் இருந்தா நல்லா இருக்கும்?
கேலக்ஸி எஃப் 22 அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து கேலக்ஸி எஃப் 42 5ஜி அறிமுகம் செய்ய சாம்சங் நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த சாதனம் பல தளங்களில் தோன்றி வருகிறது. மேலும் இது கேலக்ஸி ஏ22 5ஜி சாதனத்தின் மறுபெயரிட்ட பதிப்பாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சாதனம் தற்போது கீக்பெஞ்சில் காணப்படுகிறது. கேலக்ஸி எஃப் 42 5ஜி-க்கான சோதனையின் இறுதிகட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் சாதனம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேலக்ஸி எஃப் 42 5ஜி ஸ்மார்ட்போன் கீக்பெஞ்ச் தரவுத்தளத்தில் SM-E426B என்ற மாடல் எண்ணுடன் காணப்படுகிறது. பெஞ்ச் மார்க் தரவுத்தளத்தின்படி, சாதனம் மீடியாடெக் MT6833V / NZA என்ற செயலியுடன் தொடங்கப்பட உள்ளது. ஆன்லைன் அறிக்கைகள் கூறுவது போல் இந்த டைமன்சிட்டி 700 செயலி மூலம் இது இயக்கப்படும் என பரிந்துரைக்கப்படுகின்றன. ஆக்டோ கோர் சிப்செட் 2 ஜிகாஹெர்ட்ஸ்-க்கும் அதிகமான வேகத்தோடு வருகிறது.
இந்த குறைந்த அம்ச 5ஜி சிப்செட் ஆனது போக்கோ எம் 3 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 8 5ஜி உள்ளிட்ட சமீபத்திய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலியானது 6ஜிபி ரேம் உடன் இணைக்கப்படும் என கீக்பெஞ்ச் அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும் இதன் சேமிப்பகத் திறன் வெளியிடப்படவில்லை. இது 128 ஜிபி உள்சேமிப்புடன் வரலாம் என கூறப்படுகிறது.
வேறுசில உள்ளமைப்புகளும் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ வெளியீடு தேதி வரும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம் உள்ளது. கேலக்ஸி எஃப் 42 5ஜி கீக்பெஞ்ச் பட்டியலின் தகவலின்படி இது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. ஒன்யூஐ 3.0 இடைமுகத்துடன் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் ஒற்றை கோர் சோதனைியல் 559 புள்ளிகளையும் மல்டி கோர் சோதனையில் 1719 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5ஜி சாதனத்தில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில், சாம்சங் கேலக்ஸி எஃப் 22 5ஜி சாதனத்தின் மறுபெயரிட்ட பதிப்பாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது. அப்படி இதன் மறுபெயரிட்ட பதிப்பாக இருக்கும்பட்சத்தில் இதில் 48 எம்பி முதன்மை கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் என மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப் 42 5ஜி சாதனமானது 6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிலையான 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி மற்றும் 720 பிக்சல் எச்டி ப்ளஸ் தெளிவுத்திறனோடு வரும் என கூறப்படுகிறது. மேலும் இதன் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ வசதிக்கென 8 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications