Home
Mobile

64எம்பி கேமராவுடன் களமிறங்கும் புதிய சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் மாடலை வரும் அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

64எம்பி கேமராவுடன் களமிறங்கும் புதிய சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்.!

இந்த நிகழ்வு அக்டோபர் 8 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு சாம்சங்கின் அதிகாரப்பூர்வ சேனல்கள் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த தொலைபேசி நாட்டில் பிளிப்கார்ட் பிரத்தியேகமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 2340 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக கொண்டு வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன மாடல் வெளிரும் என்பது குறிப்பிடத்தக்கது.

64எம்பி கேமராவுடன் களமிறங்கும் புதிய சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்.!

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக கருப்பு, நீலம், பசுமை
உள்ளிட்ட நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

64எம்பி கேமராவுடன் களமிறங்கும் புதிய சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்.!

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப் சி, ஜி.பி.எஸ் / க்ளோனாஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F41 with 64 Mega Pixel Camera Launching in India on October 8 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X