Home
Mobile

Samsung கேலக்ஸி F41 வச்சி இருக்கீங்களா? அப்போ உடனே போன் செட்டிங்ஸ் போங்க; ஏனென்றால்

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 கடந்த ஆண்டு அக்டோபரில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்சமயம் வெளிவந்த தகவலின்படி இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன் யுஐ 3.0 இன் நிலையான அப்டேட்-ஐ வெளியிட்டுள்ளது
சாம்சங் நிறுவனம்.

புதிய அப்டேட் ஆனது January 2020

மேலும் இந்த புதிய அப்டேட் ஆனது January 2020 security patch கொண்டுவருகிறது. அதேபோல் பல்வேறு புதிய அம்சங்கள் இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட்-ல் கிடைக்கும் .

குறிப்பிட்ட அப்டேட் பற்றிய தகவல் உங்களுக்கு வரவில்லை என்றால், நீங்கள் கைமுறையாக கூட இதை சரிபார்க்கலாம் மற்றும் அப்டேட் செய்யலாம், அதற்கு நீங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ்-ற்குள் செல்ல வேண்டும், பின்னர் சாப்ட்வெர் அப்டேட்டை சரிபார்க்கலாம்.என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

எஃப் 41 ஸ்மார்ட்போன் மாடல் 6

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் மாடல் 6.4 இன்ச் அளவிலான புல் எச்டி + சூப்பர் அமோலேட் இன்பினிட்டி-யு டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 420 நிட் வரை பீக் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஆதரவு கொண்ட சாம்சங்

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் ஆனது ஃப்யூஷன் கிரீன், ஃப்யூஷன் ப்ளூ மற்றும் ஃப்யூஷன் பிளாக் நிங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் ஹூட்டின் கீழ், எக்ஸினோஸ் 9611 SoC உள்ளது. மேலும் இது 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த SoC பல்வேறு சாம்சங் கேலக்ஸி எம்-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இயக்கும் ஒரு ப்ராசஸர் ஆகும்.

 சென்சார் +

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இது 4கே வீடியோ பதிவுகளையும் ஆதரிக்கிறது. செல்பீக்களுக்காக இதில் 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது, இதுவும் லைவ் போகஸ் ஆதரவுடன் வருகிறது.

 பின்புறம் கைரேகை சென்சார் வசதி உள்ளது

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வசதி உள்ளது. மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன்.

ப் 41 ஸ்மார்ட்போனில்

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். இதன் உள்ளமைக்கப்பட்ட பேட்டரி 21 மணிநேர ப்ரவுஸிங் நேரம் அல்லது 48 மணிநேர குரல் அழைப்பை ஒரே சார்ஜில் வழங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F41 Received Android 11 with One UI 3.0 Update: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X