அறிமுகம் செய்பட்ட சில நாட்களிலேயே விலைகுறைப்பு பெற்ற Galaxy F41 ஸ்மார்ட்போன்.!
அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்களும் விலைகளிலும் ரூ.500 குறைக்கப்பட்டுள்ளது.

இப்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்புக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் மாடலை ரூ.15,499-விலையிலும், 6ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எஃப் 41 மாடலை ரூ.16,499-விலையிலும் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் மாடல் 6.4 இன்ச் அளவிலான புல் எச்டி + சூப்பர் அமோலேட் இன்பினிட்டி-யு டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 420 நிட் வரை பீக் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஒன் யுஐ கோர் உடன் இயங்குகிறது. குறிப்பாக ஃப்யூஷன் கிரீன், ஃப்யூஷன் ப்ளூ மற்றும் ஃப்யூஷன் பிளாக் நிங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது.

ஹூட்டின் கீழ், எக்ஸினோஸ் 9611 SoC உள்ளது, இது 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த SoC பல்வேறு சாம்சங் கேலக்ஸி எம்-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இயக்கும் ஒரு ப்ராசஸர் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இது 4கே வீடியோ பதிவுகளையும் ஆதரிக்கிறது. செல்பீக்களுக்காக இதில் 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது, இதுவும் லைவ் போகஸ் ஆதரவுடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வசதி உள்ளது. மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். இதன் உள்ளமைக்கப்பட்ட பேட்டரி 21 மணிநேர ப்ரவுஸிங் நேரம் அல்லது 48 மணிநேர குரல் அழைப்பை ஒரே சார்ஜில் வழங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
News Source: gadgetsnow


Click it and Unblock the Notifications