Home
Mobile

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஓப்பன் சேல் தொடங்கியது.! இனி 24 மணி நேரமும் வாங்க கிடைக்கும்.!

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 சாதனம் ஆனது இப்போது திறந்த விற்பனையின் (ஓப்பன் சேல்) கீழ் வாங்க கிடைக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனை 24/7 எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம் என்று அர்த்தம். குறிப்பாக தீபாவளி பண்டிகை காலம் காரணமாக இதுவொரு தற்காலிகமான ஓப்பன் சேல் ஆக இருக்கலாம் என்று தெரிகிறது.

சிறப்பு தள்ளுபடி விலையில்

இந்த சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் மாடல் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,499 என்கிற சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்கிறது, இது 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கானது. மறுகையில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலும் உள்ளது, அது ரூ.16,499 என்கிற சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

 பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்

அதாவது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை இருக்கும் வரை மேற்க் குறிப்பிடப்பட்ட விலை பொருந்தும் என்பதை நினைவில் கொள்க. பண்டிகை விற்பனை காலம் அக்டோபர் 21-ம் தேதியுடன் முடிவடையும். அதன் பிறகு சாம்சங் எஃப் 41 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,999 மற்றும் ரூ.17,999 என்கிற அசல் விலைக்கு திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 41

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் மாடல் 6.4 இன்ச் அளவிலான புல் எச்டி + சூப்பர் அமோலேட் இன்பினிட்டி-யு டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 420 நிட் வரை பீக் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட சாம்சங்

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஒன் யுஐ கோர் உடன் இயங்குகிறது. குறிப்பாக ஃப்யூஷன் கிரீன், ஃப்யூஷன் ப்ளூ மற்றும் ஃப்யூஷன் பிளாக் நிங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது.

 இந்த SoC பல்வேறு சாம்சங்

ஹூட்டின் கீழ், எக்ஸினோஸ் 9611 SoC உள்ளது, இது 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த SoC பல்வேறு சாம்சங் கேலக்ஸி எம்-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இயக்கும் ஒரு ப்ராசஸர் ஆகும்.

ஸ்மார்ட்போனின்

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இது 4கே வீடியோ பதிவுகளையும் ஆதரிக்கிறது. செல்பீக்களுக்காக இதில் 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது, இதுவும் லைவ் போகஸ் ஆதரவுடன் வருகிறது.

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வசதி உள்ளது. மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன்.

48 மணிநேர குரல் அழைப்பை ஒரே சார்ஜில் வழங்கும்

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். இதன் உள்ளமைக்கப்பட்ட பேட்டரி 21 மணிநேர ப்ரவுஸிங் நேரம் அல்லது 48 மணிநேர குரல் அழைப்பை ஒரே சார்ஜில் வழங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F41 now on open sale in India via Flipkart and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X