Samsung Galaxy F41 பிளிப்கார்டில் முதல்விற்பனை தொடக்கம்: ஆரம்பமே சலுகையோடு!

|

பிளிப்கார்ட்டில் இன்று முதல் முறையாக சாம்சங் கேலக்ஸி எஃப் 41 விற்பனை தொடங்குகிறது. இதன் விலை, அம்சங்கள் மற்றும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் முதன்முறையாக பிளிப்கார்ட் பிக் பில்லியன் தினத்தில் விற்பனைக்கு வருகிறது. ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பும், 32 மெகாபிக்சல் செல்பி கேமராவும் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஃப் 41 எக்ஸினோஸ் 9611 SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 41: விலை

சாம்சங் கேலக்ஸி எஃப் 41: விலை

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.15,499 எனவும் 6 ஜிபி + 128 ஜிபி சேமிப்பின் விலை ரூ.16,499 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஃப்யூஷன் கிரீன், ஃப்யூஷன் ப்ளூ மற்றும் ஃப்யூஷன் பிளாக் போன்ற வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. பிக் பில்லியன் விற்பனையின் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட்போன் வெளியானது. அக்டோபர் 21 ஆம் தேதி பண்டிகை தின விற்பனை முடிந்ததும், சாம்சங் கேலக்ஸி எஃப் 41 6 ஜிபி 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் ரூ.16,999 எனவும் 6ஜிபி ரேம் 128ஜிபி சேமிப்பு வேரியண்ட் ரூ.17,999 எனவும் நிர்ணயிக்கப்படும்.

சாம்சங் கேலக்ஸி எஃப் 41: சலுகைகள்

சாம்சங் கேலக்ஸி எஃப் 41: சலுகைகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கும் 10% தள்ளுபடி கிடைக்கும். கூடுதலாக, பிளிப்கார்ட் ஸ்மார்ட் மேம்படுத்தல் திட்டத்தையும் வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனை நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து 70 சதவீத தள்ளுபடியோடு பெறலாம்.

ரூ.5,999-க்கு ஸ்மார்ட்டிவிகள் வாங்க சரியான வாய்ப்பு: குறுகிய காலத்திற்கு மட்டுமே!ரூ.5,999-க்கு ஸ்மார்ட்டிவிகள் வாங்க சரியான வாய்ப்பு: குறுகிய காலத்திற்கு மட்டுமே!

சாம்சங் கேலக்ஸி எஃப் 41: அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஃப் 41: அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஆண்ட்ராய்டு 10 ஆதரவு யுஐ கோருடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.4 அங்குல முழு எச்டி+ சூப்பர் அமோலேட் இன்பினிட்டி-யு டிஸ்ப்ளே இருக்கிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் எக்ஸினோஸ் 9611 எஸ்ஓஎஸ் செயலி மூலம் இயக்கப்படுகிறது.
அதோடு மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கென 512 ஜிபி வரை மெமரிகார்டு பொருத்தும் ஸ்லாட் வசதி இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 41: கேமரா அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஃப் 41: கேமரா அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. அது 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் உள்ளது. இது செல்பிக்கென முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

6,000 எம்ஏஎச் பேட்டரி

6,000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 6,000 எம்ஏஎச் பேட்டரி அம்சம் இருக்கிறது. இதை சார்ஜ் செய்வதற்கென 15W சூப்பர்ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 48 மணிநேர குரலழைப்புகள் மேற்கொள்ளலாம். இணைப்பு ஆதரவுகளுக்கென 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை உள்ளன.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F41 First Sale Start Via Flipkart in India with Amazing Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X