Home
Mobile

போட்றா வெடிய.. ஆஃபரில் ரூ.20000 க்குள்ள Samsung 5ஜி போன்.. OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. OIS கேமரா!

இந்தியாவில் கம்மியான விலைக்கு 6 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்களை கொடுப்பதில் சாம்சங் நிறுவனத்தை அடித்து கொள்ள முடியாது. இதில் ஓஐஎஸ் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி பீச்சர்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எப்36 (Samsung Galaxy F36) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

சாம்சங் நிறுவனத்தில் ஸமார்ட்போன்களின் விலை அதிகரித்து வருகிறது. இருப்பினும், அதே விலையில் இருந்து தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. அப்படி பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரியுடன் கிடைக்கும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 ஸ்மார்ட்போனுக்கு 9 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது.

போட்றா வெடிய.. ஆஃபரில் ரூ.20000 க்குள்ள Samsung 5ஜி போன்.. OIS கேமரா!

இதனுடன் ரூ.20,999 விலைக்கு வாங்கி கொள்ள கிடைக்கிறது. மேலும், பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.1050 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதையும் பெற்றால், ரூ.20,000 கீழ் ரூ.19,949 விலைக்கு வாங்கி கொள்ளலாம். கோரல் ரெட் (Coral Red) கலரில் கிடைக்கிறது.

மேலும், லக்ஸ் வயலெட் (Luxe Violet) மற்றும் ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) ஆகிய கலர்களிலும் வாங்கி கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 இருக்கிறது. ஆனால், 6 ஜெனரேஷன் ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மட்டுமல்லாமல், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எப்36 அம்சங்கள் (Samsung Galaxy F36 Specifications): இதில் மீடியாடெக் அல்லது ஸ்னாப்டிராகன் சிப்செட் எதிர்பார்க்க முடியாது. சாம்சங் நிறுவனத்துக்கு சொந்தமான ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப மாலி ஜி68 எம்பி5 ஜிபியு (Mali G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மட்டுமல்லாமல், ஒன்யுஐ 7 (One UI 7) கொடுக்கப்பட்டு உள்ளது. 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொடுத்துள்ளது. ஆகவே, இந்த பட்ஜெட்டில் பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் கிடைக்கும். புரொடக்சனும் கிடைக்கிறது.

ஆகவே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சனை பெற்று கொள்ளலாம். 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்துள்ளது. ஓஐஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

இதுபோக 2 எம்பி மெக்ரோ கேமராவையும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 4K ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. வெறும் 7.7 எம்எம் தடிமனில் 5000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. 187 கிராம் எடை கொடுத்துள்ளது. இந்த பேட்டரிக்கு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது.

செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 13 எம்பி செல்பீ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கவில்லை. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் மட்டுமே கிடைக்கின்றன. இருப்பினும், டைப்-சி ஆடியோ கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த விலைக்கு ஏற்ப பக்காவான பீச்சர்களையே கொடுத்து இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F36 With 6GB RAM Selling At Price Under Rs 20000 in Flipkart Check This Deal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X