Home
Mobile

பிச்சிக்குது விற்பனை.. ரூ.15000 பட்ஜெட்ல SAMSUNG.. OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி (Samsung Galaxy F36 5G) போனின் விற்பனை தள்ளுபடி போக தொடங்கிவிட்டது. பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், கேமரா, சிப்செட், பேட்டரி மற்றும் டிஸ்பிளே பீச்சர்களிலும் பட்ஜெட்டைவிட கூடுதல் அவுட்புட் கிடைப்பதால் விற்பனை சக்கைப்போடு போடுகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போனின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் ஜூலை 19ஆம் தேதி இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போன் வெளியானது. ரூ.15,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் லெதர் டிசைன் மட்டுமல்லாமல், டியூரபிலிட்டி பீச்சர்களிலும் பட்டையை கிளப்பியது. இதனால், எப்போது விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்பு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துவுடன் முடிந்துவிட்டது.

பிச்சிக்குது விற்பனை.. ரூ.15000 பட்ஜெட்ல SAMSUNG.. OIS கேமரா.. மாடல்?

சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F36 5G Specifications): இந்த சாம்சங் போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) பாதுகாப்பு கொண்ட 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த இன்பினிட்டி-யு (Infinity-U) டிஸ்பிளே மாடலில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் பேக் செய்யப்பட்டுள்ளது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே கிடைப்பதால், பிரீமியம் டிஸ்பிளே அனுபவத்தை எதிர்பார்க்க முடியும். இதற்கு ஏற்ப கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording) கொண்ட 50 எம்பி மெயின் கேமராவை கொடுக்கிறது.

இந்த கேமராவுக்கு 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், நைட் போர்ட்ராய்டு, அட்வான்ஸ்டு நைட் மோட் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. மேலும், ஆப்ஜெட் எரைசர், இமேஜ் கிளிப்பர் போன்ற பீச்சர்களையும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போன் கொடுக்கிறது. ஜெமினி லைவ், சர்க்கிள் டூ சர்ச் பீச்சர்களும் கிடைக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போனில் 13 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 2 வேரியண்ட்கள் ஆர்டர் செய்ய கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் மற்றும் சாம்சங் ஒன் யுஐ 7 (Samsung One UI 7) உள்ளது.

டிஸ்பிளேவுக்கு ஓரளவு அவுட்புட் கொடுக்கும்படி மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜ போனில் 5000mAh பேட்டரி மற்றும் அந்த பேட்டரிக்கு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. கோரல் ரெட் (Coral Red), லக்ஸ் வயலெட் (Luxe Violet) மற்றும் ஓனிக்ஸ் பிளாக் (Onxy Black) கலரில் கிடைக்கிறது.

6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.17,499ஆகவும், 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்தால், ரூ.1,160 உடனடி டிஸ்கவுண்ட் போக ரூ.15,779 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். பிளிப்கார்ட் தளத்தில் எக்ஸ்சேஞ்ச் மற்றும் ஈஎம்ஐ போன்ற சலுகைகளும் கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F36 5G With 8GB RAM Available To Purchase Under Rs 16000 Check Flipkart Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X