ஜூலை.29-க்கு அப்புறம் இதுதான்.. ரூ.15999 பட்ஜெட்ல 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சாம்சங் பிரியர்களும் வரும் ஜூலை 29ஆம் தேதிக்கு மரண வெயிட்டிங் மோடில் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால், பட்ஜெட் விலையில் ஓஐஎஸ் கேமரா, சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொடுக்கும் சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி (Samsung Galaxy F36 5G) விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த சாம்சங் போனின் விலை, பீச்சர்கள் உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் ஜூலை 29ஆம் தேதி முதல் இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போன் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆரம்பமே அறிமுக சலுகையில் கிடைப்பதால், மேலும் அடிமட்ட விலைக்கு வாங்கி கொள்ள முடியும். அதாவது, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.17,499ஆக இருக்கிறது.

இந்த விலையில் இருந்து ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், கூடுதலாக ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக ரூ.1,500 தள்ளுபடி போக ரூ.15,999 பட்ஜெட்டில் இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். இதில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டும் இருக்கிறது.
இந்த வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆக இருக்கிறது. இதற்கும் பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. பிளிப்கார்ட் (Flipkart) மட்டுமல்லாமல், சாம்சங் இந்தியா (Samsung India) தளத்திலும் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த சாம்சங் போனில் கோரல் ரெட் (Coral Red), லக்ஸ் வயலெட் (Luxe Violet) கலர்கள் உள்ளது.
மேலும், ஓனிக்ஸ் பிளாக் (Onxy Black) கலரும் கிடைக்கிறது. பேக் பேனலில் கிளாசி லெதர் பேட்டர்ன் டிசைன் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சனை கொடுத்து இருக்கிறது. வழக்கமாக கிடைக்கும் டிரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera) டிசைன் கிடைக்கிறது. இப்போது மற்ற பீச்சர்களை பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F36 5G Specifications): இந்த சாம்சங் மாடலில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. 13 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி சப்போர்ட் கிடைக்கிறது.
6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் புரொடெக்சன் உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் இந்த டிஸ்பிளேவில் உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போனில் இன்-ஹவுஸ் சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் உள்ளது.
ஆனால், பட்ஜெட் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. லேட்டஸ்ட் யுஐ கொடுக்கும்படி சாம்சங் ஒன் யுஐ 7 (Samsung One UI 7) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 5000mAh பேட்டரி, 25W சார்ஜிங், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சிலாட், டூயல் சிம் சிலாட் மற்றும் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர்கள் உள்ளது.


Click it and Unblock the Notifications








