SALE மிரள விட்டுருச்சு.. ஆஃபர் ரேட்ல Samsung 5G போன்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 6GB ரேம்.. எந்த மாடல்?
இந்தியாவில் 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி (Samsung Galaxy F36 5G) ஸ்மார்ட்போனானது, தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கிறது. ஓஎஸ் பாலிசி மட்டுமல்லாமல், ஸ்லிம் பாடியில் வீகன் லெதர் பேனல், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்பிளஸ் டிஸ்பிளே போன்ற பீச்சர்களையும் கொண்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 13 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.19,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், குறிப்பிட்ட பேங்குகளின் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.18,999 விலைக்கு இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

ஸ்லிம் டிசைன்
சாம்சங் ஸ்மார்ட்போன்கள் ஸ்லிம் டிசைனுக்கு பெயர்பெற்றவையாக இருக்கின்றன. 7.7 எம்எம் தடிமனில் இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 197 கிராம் எடை உள்ளது. வீகன் லெதர் பினிஷ் (Vegan Leather Finish) கிடைப்பதால், பிரீமியம் லுக் கொண்ட மாடலாக இருக்கிறது. ஃப்ரண்ட்டில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) உள்ளது.
ஓஎஸ் பாலிசி
இந்த பட்ஜெட்டில் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அதிகபட்சம் 3 ஓஎஸ் அப்டேட்களை மட்டுமே கொடுக்கும். ஆனால், இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைத்து உள்ளது. மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் கொடுத்து உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஒன் யுஐ 7 (One UI 7) கொண்டுள்ளது. ஏஐ பவர்டு எடிட் பரிந்துரை, சர்க்கிள் டூ சர்ச் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. ஏஐ டெப்த் மேப் (AI Depth Map) கொண்ட நைட் போர்ட்ராய்டு (Night Portrait) உள்ளிட்ட கேமரா பீச்சர்களும் கொடுத்து உள்ளது. இப்பேது, டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி உள்ளிட்ட ஒட்டுமொத்த பீச்சர்களையும் தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி அம்சங்கள்
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்பிளஸ் புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் கொண்டுள்ளது.
மேலும், மாலி ஜி68 எம்பி5 ஜிபியு (Mali G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்து உள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜியுடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.
செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 4K வீடியோ ரெக்கார்டிங்குடன் 13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியை இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) கொண்ட மாடலாக உள்ளது.


Click it and Unblock the Notifications







