பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. AMOLED டிஸ்பிளே.. 6 ஓஎஸ் அப்டேட்.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் Flipkart SASA LELE எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி (Samsung Galaxy F36 5G) ஸ்மார்ட்போன் மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போனுக்கு 26 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.850 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F36 5G Specifications): எக்ஸ்நோஸ் 1380 எஸ்ஒசி (Exynos 1380 SoC) சிப்செட் வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு சூப்பர் அமோலெட் (Infinity-U Super AMOLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.
சாம்சங் ஒன் யுஐ 7 (Samsung One UI 7) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 6 ஜென் ஓஎஸ் அப்டேட் மற்றும் ஆறு வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio),பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker) உள்ளிட்ட வசதிகளுடன் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
இந்த சாம்சங் போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதுவும் இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. கோரல் ரெட் (Coral Red), லக்ஸ் வயலட் (Luxe Violet) மற்றும் ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். மேலும் இந்த போனின் எடை 197 கிராம் ஆகும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.


Click it and Unblock the Notifications