Home
Mobile

Samsung Galaxy F36 5G அறிமுகத்திற்கு ரெடி.. எப்போது, என்ன விலை, என்னென்ன அம்சங்கள்?

சாம்சங் நிறுவனம் கூடிய விரைவில் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. அது சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி (Samsung Galaxy F36 5G) ஸ்மார்ட்போன் ஆகும். இது எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? இது கடந்த மாதமே அதிகாரப்பூர்வ சப்போர்ட் பேஜ்களில் தோன்றி விட்டது மற்றும் இது இந்தியாவின் பிஐஎஸ் (BIS) சான்றிதழ் தளத்திலும் காணப்பட்டுள்ளது. ஆக இது எப்போது வேண்டுமானலும் அறிமுகம் செய்யப்படலாம். ஆனால் சரியான வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகவில்லை.

Samsung Galaxy F36 5G அறிமுகத்திற்கு ரெடி.. எப்போது, என்ன விலை?

சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்யலாம்?சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதன் "முன்னோடிகளை" போன்ற டிசைனை பின்பற்ற அதிக வாய்ப்புள்ளது. அதாவது, இது அதன் எம்-சீரிஸ் "சகாக்களான" கேலக்ஸி எம்34 மற்றும் கேலக்ஸி எப்34 போன்ற ஸ்மார்ட்போன்களை போலவே உள்ளது.

நினைவூட்டும் வண்ணம் மேற்குறிப்பிட்ட இரண்டு ஸ்மார்ட்போன்களுமே சில இடங்களில் சில வேறுபாடுகளை தவிர, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களையே பகிர்ந்து கொள்கின்றன. ஆக கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போனானது இன்னும் அறிவிக்கப்படாத கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போனில் எக்ஸினோஸ் 1380 சிப்செட் (Exynos 1380), 6ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஆகிய அம்சங்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாக இருந்தால் மேற்கண்ட அம்சங்கள் - கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போனிலும் இடம்பெறலாம். மேலும் சாம்சங்கின் முந்தைய உத்தியின் அடிப்படையில், கேலக்ஸி எம்36 மாடல் ஆனது அமேசான் வழியாக விற்கப்படும், அதே நேரத்தில் கேலக்ஸி எப்36 மாடல் ஆனது பிளிப்கார்ட் வழியாக விற்கப்படும்.

சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? சாம்சங் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.35,000 அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஆகஸ்ட் 2023 இல் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பிறகு, சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி எப்35 மாடல் அறிமுகம் செய்யவில்லை.

சாம்சங் குறித்த மற்ற லேட்டஸ்ட் அப்டேட்களை பொறுத்தவரை, இந்நிறுவனம் பல புதிய ஏஐ அம்சங்களை கொண்ட தனது லேட்டஸ்ட் ஆப்ரேடிங் சிஸ்டம் ஆன ஒன் யுஐ 8 பீட்டா புரோகிராமை (One UI 8 Beta Program) ரிலீஸ் செய்து வருகிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ (Android 16 OS) அடிப்படையாக கொண்ட இந்த பீட்டா ரிலீஸ், இப்போது அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஜெர்மனி மற்றும் தென் கொரியா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கிடைக்கிறது.

என்னென்ன சாம்சங் ஸ்மார்ட்போன்கள் ஒன் யுஐ 8 அப்பேட்டை -ஐ பெறுவதற்கான தகுதியான போன்களின் பட்டியல் இதோ:
- சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸை (Samsung Galaxy S25 Series)
- சாம்சங் கேலக்ஸி எஸ்23
- சாம்சங் கேலக்ஸி எஸ்23 பிளஸ்
- சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா
- சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ

- சாம்சங் கேலக்ஸி எஸ்22
- சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ்
- சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா
- சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ

- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 7
- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃப்ளிப் 7
- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6
- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃப்ளிப் 6

- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5
- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃப்ளிப் 5
- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 4
- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃப்ளிப் 4

- சாம்சங் கேலக்ஸி ஏ33
- சாம்சங் கேலக்ஸி ஏ53
- சாம்சங் கேலக்ஸி ஏ73
- சாம்சங் கேலக்ஸி ஏ14

- சாம்சங் கேலக்ஸி ஏ24
- சாம்சங் கேலக்ஸி ஏ34
- சாம்சங் கேலக்ஸி ஏ54
- சாம்சங் கேலக்ஸி ஏ15

- சாம்சங் கேலக்ஸி ஏ25
- சாம்சங் கேலக்ஸி ஏ35
- சாம்சங் கேலக்ஸி ஏ55
- சாம்சங் கேலக்ஸி ஏ06

- சாம்சங் கேலக்ஸி ஏ16
- சாம்சங் கேலக்ஸிஏ26
- சாம்சங் கேலக்ஸி ஏ36
- சாம்சங் கேலக்ஸி ஏ56

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F36 5G Launching Soon in India Check Out Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X