Home
Mobile

இந்தியாவில் புதிய சாம்சங் 5ஜி போன் அறிமுகம்.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி (Samsung Galaxy F36 5G) ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய சாம்சங் போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய சாம்சங் போனின் விலை, விற்பனை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F36 5G Specifications): சாம்சங் நிறுவனத்தின் சொந்த எக்ஸ்நோஸ் 1380 எஸ்ஒசி (Exynos 1380 SoC) சிப்செட் வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

இந்தியாவில் புதிய சாம்சங் 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை?

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு சூப்பர் அமோலெட் (Infinity-U Super AMOLED)டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் உள்ளது.

சாம்சங் ஒன் யுஐ 7 (Samsung One UI 7) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. ஆனாலும் இந்த போனுக்கு 6 ஜென் ஓஎஸ் அப்டேட் மற்றும் ஆறு வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதுவும் இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio),பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker) உள்ளிட்ட வசதிகளுடன் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த சாம்சங் போன் விற்பனைக்கு வரும். மேலும் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

இந்தியாவில் புதிய சாம்சங் 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை?

5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. கோரல் ரெட் (Coral Red), லக்ஸ் வயலட் (Luxe Violet) மற்றும் ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black)நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். மேலும் இந்த போனின் எடை 197 கிராம் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி விலை: 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போனின் விலை ரூ.17,499-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.18,999-ஆக உள்ளது. அதுவும் சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போன் ஜூலை 29 முதல் பிளிப்கார்ட், சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிமுக சலுகையாக (வங்கி சலுகையுடன் சேர்த்து) ரூ.15,999 விலையில் சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போன் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F36 5G launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X