Home
Mobile

ஜூலை 19 உறுதி.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. இந்தியாவுக்கு வரும் புதிய Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி (Samsung Galaxy F36 5G) ஸ்மார்ட்போனை வரும் ஜூலை 19-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F36 5G Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு சூப்பர் அமோலெட் (Infinity-U Super AMOLED) டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனின் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 19 உறுதி.. இந்தியாவுக்கு வரும் புதிய Samsung 5ஜி போன்..

தரமான எக்ஸ்நோஸ் 1380 எஸ்ஒசி (Exynos 1380 SoC) சிப்செட் வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு 6 வருட ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுதவிர பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தி உள்ளது சாம்சங் நிறுவனம்.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும். வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.

ஜூலை 19 உறுதி.. இந்தியாவுக்கு வரும் புதிய Samsung 5ஜி போன்..

சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய சாம்சங் 5ஜி போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.20,000-க்கு கீழ் சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சாம்சங் போன் பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F36 5G India launch date announced: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X