Home
Mobile

கனவிலும் நினைக்காத ஆஃபர்.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. Samsung 5ஜி போனை வாங்க சரியான நேரம். எந்த மாடல்?

பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி (Samsung Galaxy F36 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த சாம்சங் போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், ஃபாஸ்ட் சார்ஜிங், இன்பினிட்டி-யு சூப்பர் அமோலெட்(Infinity-U Super AMOLED) டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.

இந்தியாவில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.17,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

கனவிலும் நினைக்காத ஆஃபர்.. Samsung 5ஜி போனை வாங்க சரியான நேரம்..

சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F36 5G Specifications): சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு சூப்பர் அமோலெட் (Infinity-U Super AMOLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.

தரமான எக்ஸ்நோஸ் 1380 எஸ்ஒசி (Exynos 1380 SoC) சிப்செட் வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சாம்சங் ஒன் யுஐ 7 (Samsung One UI 7) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 6 ஜென் ஓஎஸ் அப்டேட் மற்றும் ஆறு வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio),பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker) உள்ளிட்ட வசதிகளுடன் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

கனவிலும் நினைக்காத ஆஃபர்.. Samsung 5ஜி போனை வாங்க சரியான நேரம்..

அதேபோல் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

அதுவும் 5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. கோரல் ரெட் (Coral Red), லக்ஸ் வயலட் (Luxe Violet) மற்றும் ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். மேலும் இந்த போனின் எடை 197 கிராம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F36 5G get 39 percentage Discount in flipkart big billion days sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X