ஆர்டர் பிச்சிக்கும்.. 6000mAh பேட்டரி, 50எம்பி கேமரா.. இன்று களமிறங்கும் புது Samsung 5ஜி போன்.. கம்மி விலை..
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சக்திவாய்ந்த சிப்செட், தரமான கேமரா, பெரிய பேட்டரி மற்றும் பல அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,999-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கேலக்ஸி எப்34 5ஜி பிளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும், இதன் முன்பதிவு இன்று தொடங்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன் ஆனது 6.4-இன்ச் Super AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவரும். பின்பு இந்த போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், ப்ளூ-லைட் பாதுகாப்பு வசதி, விஷன் பூஸ்டர் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
கேலக்ஸி எப்34 5ஜி போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் 4கே வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளில் கூட இந்த போனின் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும்.
அதேபோல் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவும் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன் ஆனது எக்ஸிநோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் உடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வேகம் மற்றும் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் போன் அறிமுகமாகும். மேலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு வழங்கப்படும்.
6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஆதரவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி (Samsung Galaxy F34 5G) ஸ்மார்ட்போனில் 6000 எம்எஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த புத்தம் புதிய கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. அதேபோல் எலக்ட்ரிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் கிரீன் நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு குறைந்த எடையில் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








