Home
Mobile

அவசரப்பட்டு வேற 5G போன் வாங்கிடாதீங்க.. ஏன்னா ஆகஸ்ட் 7 வரும் இந்த Samsung மாடலின் விலை, அம்சங்கள் அப்படி!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேலக்ஸி எப்34 5ஜி விலை மற்றும் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

அதாவது சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன் ஆனது 6.5-இன்ச் Super AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவரும். பின்பு இந்த போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், ப்ளூ-லைட் பாதுகாப்பு வசதி, விஷன் பூஸ்டர் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 7இல் அறிமுகமாகும் புதிய Samsung 5G ஸ்மார்ட்போன்!

அதேபோல் இந்த போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் 4கே வீடியோக்களை எடுக்க முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவும் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன் ஆனது எக்ஸிநோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் உடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வேகம் மற்றும் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் போன் அறிமுகமாகும்.

இருந்தபோதிலும் சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் மூன்று வருடத்திற்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஆதரவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன் அறிமுகமாகும். பின்பு நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போனில் 6000 எம்எஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த புத்தம் புதிய கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போன் குறைந்த எடையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு எலக்ட்ரிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் கிரீன் நிறங்களில் வெளிவரும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போன்.

ஆகஸ்ட் 7இல் அறிமுகமாகும் புதிய Samsung 5G ஸ்மார்ட்போன்!

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போன் இந்தியாவில் ரூ.16,999-விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக சாம்சங் இணையதளத்தில் இந்த போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F34 5G phone under 17000 with 6GB Ram 6000mah Battery Price Specifications Launch Date : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X