கியூ கட்டி வாங்குவீங்க.. 6000mAh பேட்டரி, 8ஜிபி ரேம்.. பட்ஜெட் விலையில் புதிய Samsung 5ஜி போன்.!
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போனை நேற்று (7-8-2023) அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் எக்ஸிநோஸ் சிப்செட், 6000 எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
விலை: 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.20,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த போனின் முன்பதிவு பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் இணையதளத்தில் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக
எலக்ட்ரிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் கிரீன் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். ஐசிஐசிஐ (ICICI) அல்லது கோடக் வங்கி (Kotak Bank) கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கும் பயனர்களுக்கும் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அம்சங்கள்: சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், ப்ளூ-லைட் பாதுகாப்பு வசதிஇ விஷன் பூஸ்டர் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக அமோலெட் டிஸ்பளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
கேலக்ஸி எப்34 5ஜி போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் 4கே வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளில் கூட இந்த போனின் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும்.
மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. பின்பு செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன் ஆனது எக்ஸிநோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்டபோனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு OneUI 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (ஓஎஸ்) இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த போனுக்கு நான்கு வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் மற்றும் ஐந்து வருடங்களுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி (Samsung Galaxy F34 5G) ஸ்மார்ட்போனில் 6000 எம்எஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் கைரேகை ஸ்கேனர், என்எப்சி, வைஃபை, புளூடூத் வி5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் போன். குறிப்பாக பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








