Samsung கேலக்ஸி எப்34 5ஜி vs Infinix ஜிடி 10 ப்ரோ.. ஒரே மாதிரியான விலை.. என்னென்ன அம்சங்கள்? எது சிறந்தது?
கடந்த வாரம் இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ மற்றும் சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த இரண்டு போன்களும் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த இரண்டும் ஸ்மார்ட்போன்களில் சிறந்த போன் எது என்பதைப் பார்ப்போம்.
அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.20,999-ஆக உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. இப்போது இந்த போன்களின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F34): 6.4-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் (AMOLED)டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், ப்ளூ-லைட் பாதுகாப்பு வசதி, விஷன் பூஸ்டர் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன் சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. பின்பு OneUI 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (ஓஎஸ்) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனுக்கு நான்கு வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் மற்றும் ஐந்து வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன். செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இந்த போனில் டால்பி அட்மோஸ்(Dolby Atmos) ஆதரவும் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போனில் 6000 எம்எஎச் பேட்டரி வசதி உள்ளது. மேலும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், 5ஜி (டூயல்-சிம்), என்எப்சி, வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.
இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ அம்சங்கள்(Infinix GT 10 Pro): 6.67 இன்ச் புல்எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன். இந்த டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட்,900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசிஐ - பி3 வைடு கலர் காமட் (DCI-P3 Wide Colour Gamut) மற்றும் 1920Hz டிம்மிங் ஃபிரிகொன்சி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஆனது டிரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. செல்பீ கேமராவை பொறுத்தவரை 32 எம்பியாக இருக்கிறது. அதேபோல் டிடிஎஸ் சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், வயர்லெஸ் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ. ப்ளூடூத் 5.2 மற்றும் வை-பை 6 கனெக்டிவிட்டி,3.5 மிமீ ஆடியோ ஜாக், டைப் - சி சார்ஜிங் போர்ட் மற்றும் எஸ்டிகார்டு போர்ட், இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார், எஃப்எம் ரோடியோ, என்எஃப்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.
மாலி ஜி77 எம்சி9 (ARM Mali-G77 MC9) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8050 (MediaTek Dimensity 8050) சிப்செட் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த இன்பினிக்ஸ் போன் சைபர் மிராஜ் சில்வர் (Mirage Silver) மற்றும் பிளாக் (Cyber Black) ஆகிய 2 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது
இரண்டு போன்களின் வடிவமைப்பு: சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போன் வடிவமைப்பை பொறுத்தவரை பெரிதாக மாற்றம் ஒன்றும். அதாவது முன்பு வந்த சாம்சங் போன்களை போன்று தான் இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போன் உள்ளது. குறிப்பாக வளைந்த டிஸ்பிளே கூட இந்த போனில் இல்லை. மேலும் ஒரே மாதிரியான கேமரா அமைப்பை கொடுத்துவருகிறது சாம்சங் நிறுவனம்.
ஆனால் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன் ஆனது நத்தின் போன் போன்றே அருமையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல கேமிங் பிரியர்களை கவரும் வகையில் சைபர்பங்க் (Cyberpunk) என்னும் ரோபோட்டிக் டிசைன் பேக் பேனல் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன். சுருக்கமாக கூறவேண்டும் தரமான வடிவமைப்புடன் இந்த இன்பினிக்ஸ் போன் வெளிவந்துள்ளது.
சைபர் மெக்கா டிசைன் மற்றும் எல்இடி லைட் எபெக்ட்களை கொண்டிருக்கும் புதிய இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போனில் இசைக்கப்படும் பாடல் மற்றும் நோட்டிபிகேஷன்களுக்கு ஏற்ப எல்இடி-க்கள் ஒளிரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா எப்படி? இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன் ஆனது 108எம்பி ரியர் கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு 32எம்பி செல்பி கேமரா இந்த இன்பினிக்ஸ் போனில் உள்ளது. ஆனால் சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போன் 50எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் 13எம்பி செல்பி கேமரா கொண்டு இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக கேமரா வசதியில் கூட இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன் ஆனது சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போனை பின்னுக்கு தள்ளி உள்ளது.
பேட்டரி மற்றும் சிப்செட்: எக்ஸ்நோஸ் சிப்செட் மற்றும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் டைமன்சிட்டி 8050 சிப்செட் மற்றும் 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன். கண்டிப்பாக இந்த இன்பினிக்ஸ் போனும் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.
எது சிறந்தது? தரமான வடிவமைப்பு, சூப்பரான கேமரா, மேம்பட்ட புதிய அம்சங்கள், அருமையான பேட்டரி உள்ளிட்ட வசதிகளுடன் ஒரு கேமிங் போனை வாங்க நினைக்கும் பயனர்கள் யோசிக்காமல் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போனை வாங்கலாம். அதேசமயம் 6000எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஒரு சாதாரண 5ஜி போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போனை வாங்கலாம். குறிப்பாக கேலக்ஸி எப்34 5ஜி போனை விட இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ மிகவும் சிறந்தது.


Click it and Unblock the Notifications








