Home
Mobile

இன்று விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன்.! விலை மற்றும் விபரங்கள்.!

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,499-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.18,499-ஆக உள்ளது. குறிப்பாக பிளிப்கார்ட், சாம்சங்.காம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை கடைகளில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அறிமுக சலுகையாக 4ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எஃப்23 5ஜி மாடலை ரூ.15,999-விலையிலும், 6ஜிபி ரேம் வேரியண்டை ரூ.16,999-விலையிலும் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அக்வா ப்ளூ மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ம்சங் கேலக்ஸி எஃப்23 5

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கியமான அம்சங்களுடன் இந்த ஸமார்ட்போன்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனில்

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸமார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் One UI 4.1சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்தஸ்மார்ட்போன் இரண்டு வருட OS மேம்படுத்தல்கள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன.பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பின்பு பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

 ஸ்மார்ட்போனில்

இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, Dolby Atmos ஆதரவு, அடாப்டிவ் பவர் சேவிங் டெக்னாலஜி உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F23 5G Sale Starts Today in India: Price, Offers and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X