Home
Mobile

ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதியுடன் விரைவில் களமிறங்கும் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் கேலக்ஸி எஃப்23 5ஜி எனும் புதிய ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி எஃப்23 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிக அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் எண் SM-E236B என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி எஃப்23 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோக்களுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவு இவற்றுள்ள இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர பல கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் உள்ளிட்ட பல அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

இந்த புதிய கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். பின்ப வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி

ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி எஃப்23 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் இன்பினிட்டி-வி எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

இந்த புதிய கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டுள்ளதுசாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி மாடல்.

ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி எஃப்23 5ஜி

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாச ஸ்மார்ட்போன் மாடல். மேலும் வைஃபை 802.11, 3.5எம்எம் ஆடியோ ஜாக், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F23 5G May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X