ரூ.17,000-க்கு கீழ் இப்படியொரு சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்குதா? மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.!

|

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது சாம்சங் நிறுவனத்தின் ஒரு அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போன்
ரூ.17,000-க்கு கீழ் கிடைக்கிறது என்பதை நம்ப முடிகிறதா? ஆம் உண்மை தான் பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.17,000-க்கு கீழ் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன் முதலில் அக்வா ப்ளூ மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் நிறங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது காப்பர் ப்ளஷ் நிறங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த சாம்சங் மற்றும் பிளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனைக்கு வருகிறது. அதேபோல் இந்த சாதனத்தை இஎம்ஐ விருப்பத்திலும் வாங்க முடியும்.

பிஎஸ்என்எல் பயனர்களே தினசரி 5ஜிபி டேட்டா வேண்டுமா? இருக்கவே இருக்கு ஒரு சூப்பர் திட்டம்.!பிஎஸ்என்எல் பயனர்களே தினசரி 5ஜிபி டேட்டா வேண்டுமா? இருக்கவே இருக்கு ஒரு சூப்பர் திட்டம்.!

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2408 x 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிக அருமையாக உள்ளது. அனைத்து இடங்களுக்கும் அருமையாக எடுத்து சென்று பயன்படுத்தும் வகையில் குறைவான எடை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன்.

இந்திய வாடிக்கையாளர்கள் கவலை: பழைய மாடலின் விலையை உயர்த்திய ஆப்பிள்- காரணம் என்ன தெரியுமா?இந்திய வாடிக்கையாளர்கள் கவலை: பழைய மாடலின் விலையை உயர்த்திய ஆப்பிள்- காரணம் என்ன தெரியுமா?

ஸ்னாப்டிராகன் 750 சிப்செட் வசதி

ஸ்னாப்டிராகன் 750 சிப்செட் வசதி

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் ஆப் உட்பட அனைத்து ஆப்களையும் தடையில்லாமல் பயன்படுத்த முடியும். மேலும் இந்நிறுவனத்தின் One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

இந்தியாவிற்கு வர ரெடியாகும் புதிய Realme Narzo 50i Prime.. பட்ஜெட் விலையில் என்ன ஸ்பெஷலா எதிர்பார்க்கலாம்?இந்தியாவிற்கு வர ரெடியாகும் புதிய Realme Narzo 50i Prime.. பட்ஜெட் விலையில் என்ன ஸ்பெஷலா எதிர்பார்க்கலாம்?

 50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

புதிய சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனில் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா +2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

பூமியின் உயிரினங்களுக்கான ஆதாரமே இதுதான்: முதன்முறையாக விண்வெளியில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!பூமியின் உயிரினங்களுக்கான ஆதாரமே இதுதான்: முதன்முறையாக விண்வெளியில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!

128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

முன்பு குறிப்பிட்டது போல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். அதேசமயம் இந்த ஸமார்ட்போனின் மென்பொருள் வசதி மற்றும் கேமரா வசதி மிக அருமையாக உள்ளது என்றே கூறலாம்.

உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..

பவர் கூல் தொழில்நுட்பம்

பவர் கூல் தொழில்நுட்பம்

மேலும் இந்த கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார், பவர் கூல் தொழில்நுட்பம் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எப்23 5ஜிஸ்மார்ட்போன்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy F23 5G is available for less than Rs 17,000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X