48எம்பி கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக டெனிம் ப்ளூ மற்றும் டெனிம் பிளாக் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த சாதனம். மேலும் இப்போது இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஜூலை 13-ம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் அறிமுக சலுகையாக பிளிப்கார்ட்டில் ப்ரீபெய்ட் பரிவர்த்தனைகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499-ஆக உள்ளது. மேலும் இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.14,999-ஆக உள்ளது.

sAMOLED Infinity-U டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி எஃப்22 மாடல் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் sAMOLED Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
பின்பு 700x1,600 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக் ஹீலியோ ஜி 80 SoC சிப்செட்
சாம்சங் கேலக்ஸி எஃப்22 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 SoC சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 3.1 மூலம் இயங்குகிறது இந்த சாதனம். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

48எம்பி பிரைமரி கேமரா
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம்.

6000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி எல்டிஇ, ப்ளூடூத் வி 5, என்எப்சி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் எடை 203 கிராம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications