Home
Mobile

விரைவில் 48எம்பி கேமராவுடன் களமிறங்கும் அசத்தலான கேலக்ஸி ஏ22.!

சாம்சங் நிறுவனம் அண்மையில் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இந்நிலையில் புதிய கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கேலக்ஸி எப்22 சாதனம் அடுத்த
வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் 48எம்பி கேமராவுடன் களமிறங்கும் அசத்தலான கேலக்ஸி ஏ22.!

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்22 மாடல் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எப்22 மாடல் ஆனது 6.44-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

விரைவில் 48எம்பி கேமராவுடன் களமிறங்கும் அசத்தலான கேலக்ஸி ஏ22.!

சாம்சங் கேலக்ஸி எப்22 மாடலில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை
பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போனில் 48எம்பி பிரைமரி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
பின்பு எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விரைவில் 48எம்பி கேமராவுடன் களமிறங்கும் அசத்தலான கேலக்ஸி ஏ22.!

சாம்சங் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் ஆனது 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும். மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அம்சங்கள் இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக இந்த சாதனம் கருப்பு நிறத்தில் வெளிவரும்.

சாம்சங் பே, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்,3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், யுஎஸ்பி டைப் சி போன்ற பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் மாடல். பின்பு ரூ.15000-க்கு கீழ் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F22 Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X