மொத்த மார்கெட் வெயிட்டிங்.. புது SAMSUNG போன்.. 5000mAh பேட்டரி.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
சாம்சங் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி (Samsung Galaxy F17 5G) ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் கடந்த வாரம் கசிந்தன. இப்போது, முழு பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த பீச்சர்கள் பட்ஜெட்டில் சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பும் பிரியர்களுக்கு ஏற்றபடி இருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
செப்டம்பர் 4ஆம் தேதியில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) இவென்ட் நடக்க இருக்கிறது. இதில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 11 (Samsung Galaxy Tab S11) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE) உள்ளிட்டவை வெளியாக இருக்கின்றன. ஆனால், இவை பிரீமியம் மாடல்களாக இருப்பதால், பட்ஜெட் பிரியர்கள் பெரிய ஆர்வம் காட்டவில்லை.

இவர்களை தட்டித் தூக்கும்படி சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்களும் கசிந்துள்ளன. இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலைக்கு வெளியாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன பீச்சர்கள் கிடைக்குமோ, அதை இதிலும் பார்க்க முடிகிறது. டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எப்27 கிடைக்க இருக்கிறது.
ஏற்கனவே, விலை விவரங்கள் கசிந்துவிட்டன. அதற்கு முன்பாக பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இந்த பீச்சர்கள் அதிகாரப்பூர்வமானவை கிடையாது. மார்கெட்டில் கசிந்த பீச்சர்கள் மட்டுமே. இருப்பினும், ஸ்மார்ட்பிரிக்ஸ் (SmartPrix) தளத்தில் கசிந்துள்ளதால், இந்த பீச்சர்களே இடம்பெற வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F17 5G Specifications): இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. 13 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம்.
ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்க இருக்கிறது. இதுபோக 2 எம்பி மேக்ரோ கேமராவுடன் டிரிபிள் ரியர் செட்டப் (Triple Rear Camera Setup) கிடைக்கிறது. லேட்டஸ்ட் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வர இருக்கிறது.
அதேபோல சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்க இருக்கிறது. இன்-ஹவுஸ் சிப்டெட்டான எக்ஸினோஸ் 1330 (Exynos 1330) வர இருக்கிறது. மேலும், வழக்கமாக கிடைக்கும் 5,000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கிடைக்க இருக்கிறது. 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Gorilla Glass Victus) பாதுகாப்பு வருகிறது.
சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி விலை (Samsung Galaxy F17 5G Price): இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆகவும் இருக்கப் போகிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.
இந்த கேலக்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 25W சார்ஜர் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. இந்திய மார்கெட்டில் எப்போது வெளியாகும் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஒட்டுமொத்த விவரங்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன.


Click it and Unblock the Notifications