Home
Mobile

ஆர்டர் அள்ள போகுது.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி (Samsung Galaxy F17 5G) ஸ்மார்ட்போன் ஆனது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி போனுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16189 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.810 வரை தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆர்டர் அள்ள போகுது.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேல்க்ஸி எப்17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F17 5G specifications): எக்ஸிநோஸ் 1330 பிராசஸர் (Exynos 1330 processor) உடன் சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 2340 x 1080 பிக்சல்ஸ் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சன் மற்றும் பல சிறப்பான வசதிகள் உள்ளன.

அதுவும் சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 6 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். பின்பு 6 வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) இந்த போனில் உள்ளது. மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) ஆதரவும் இந்த போனில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போன் IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த போன். 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஆர்டர் அள்ள போகுது.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் போன். குறிப்பாக இந்த சாம்சங் போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F17 5G with 4GB RAM available at 10 percent discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X