சொல்லாம கொள்ளாம வந்த புது Samsung 5ஜி போன்.. கம்மி விலை.. 6 ஆண்ட்ராய்டு OS அப்டேட்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேல்க்ஸி எப்17 5ஜி (Samsung Galaxy F17 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஐபி54 ரேட்டிங், 50எம்பி கேமரா, எக்ஸிநோஸ் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
சாம்சங் கேல்க்ஸி எப்17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F17 5G specifications): 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் (Super AMOLED)டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 2340 x 1080 பிக்சல்ஸ் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சன் மற்றும் பல சிறப்பான வசதிகள் உள்ளன.

50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேல்க்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 1330 பிராசஸர் (Exynos 1330 processor) உடன் சாம்சங் கேல்க்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் சாம்சங் கேல்க்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 6 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். பின்பு 6 வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) இந்த போனில் உள்ளது. மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) ஆதரவும் இந்த போனில் உள்ளது.
IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் சாம்சங் கேல்க்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். பின்பு 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது. குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் போன். குறிப்பாக இந்த சாம்சங் போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.
சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி விலை: 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி போனின் விலை ரூ.14,499-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் விலை ரூ.15,999-ஆக உள்ளது. வயலட் பாப் மற்றும் நியோ பிளாக் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் சாம்சங்.காம் தளங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








