Home
Mobile

Samsung-ன் புதிய போன்.. பட்ஜெட் விலையில் 5ஜி, AMOLED டிஸ்பிளே, 50MP கேமரா, 6 வருட அப்டேட், 5000mAh பேட்டரி!

சாம்சங் நிறுவனமானது இந்திய சந்தைக்கு ஏற்ற பல பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது அவற்றில் கேலக்ஸி எப்17 5ஜி (Samsung Galaxy F17 5G) மாடலும் ஒன்றாகும். ஒரு புதிய லீக் தகவல் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்களை வெளிப்படுத்தி உள்ளது.

நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர்களில் ஒருவரான அபிஷேக் யாதவின் (Tipster Abhishek Yadav) கூற்றுப்படி, கேலக்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வரும். 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.14,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

Samsung-ன் புதிய போன்.. பட்ஜெட் விலையில் 5ஜி, 6 வருட அப்டேட்!

அதே நேரத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஆப்ஷன் ரூ.15,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை விவரங்கள் ஆனது அறிமுக சலுகைகள் அல்லது தள்ளுபடிகளை உள்ளடக்கிய விலையாக இருக்குமா என்பதில் தெளிவு இல்லை. ஏனென்றால் சாம்சங் பெரும்பாலும் புதிய வெளியீடுகளுடன் வங்கி சலுகைகளை இணைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான AMOLED டிஸ்பிளே (டிஸ்பிளே சைஸ் குறித்த விவரங்கள் இல்லை)
- சாம்சங்கின் சொந்த எக்சினோஸ் 1330 சிப்செட் - இது மலிவு விலை 5ஜி போன்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிப்செட் ஆகும்

- 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்; செல்பீ கேமரா குறித்த விவரங்கள் இல்லை
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒன் யுஐ 7 (One UI 7) ஓஎஸ் - 6 வருட அப்டேட்ஸ் கிடைக்கும்
- 5000mAh பேட்டரி; பாஸ்ட் சார்ஜிங் குறித்த விவரங்கள் இல்லை

சமீபத்தில் இந்தோனேஷிய சந்தையில் சாம்சங் கேலக்ஸி ஏ07 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமானதும் இங்கே குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்திய சந்தைக்கும் வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்தோனேஷியாவில் இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.7,700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது, இது மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் வீடியோ பிளேபேக்கிற்காக 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது.

சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப் கொண்டு இயங்குகிறது. இந்த சிப்செட் 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடவே 2டிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்கம் செய்ய உதவும் மைக்ரோஎஸ்டி கார்டு ஆதரவையும் கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் 50எம்பி ரியர் கேமரா உள்ளது மற்றும் முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 25W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் இலவசமாக 25W டிராவல் அடாப்டர் அனுப்பிவைக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க சாம்சங் நிறுவனம் வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதியன்று, வெளியீட்டு நிகழ்வு ஒன்றை நடத்துகிறது. அதில் கேலக்ஸி எஸ்25 எப்இ (Galaxy S25 FE) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் 128ஜிபி ஆப்ஷன் $649.99 க்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.56,960 க்கும் (ஆக இந்தியாவில் ரூ.60000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரலாம்) அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F17 5G India Launch Soon Price Details Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X