ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் புது Samsung 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் அடுத்து இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எப்16 (Samsung Galaxy F16) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. சமீபத்தில் கூட பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் எப் சீரிஸ் போன்கள் டீசர் வெளியானது. எனவே வரும் வாரங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய கேலக்ஸி எப்16 போனின் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது டிப்ஸ்டர் Debayan Roy வெளியிட்ட தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி எப்16 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேதன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்16 அம்சங்கள் (Samsung Galaxy F16 Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஒசி (MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்16 போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1000 நிட்ஸ் பிரைடன்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிப்ள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5000mAh பேட்டரி உடன் இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எப்16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, புளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 போன் அறிமுகமாகும். மேலும் இந்த புதிய சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo credit: yitake


Click it and Unblock the Notifications








