Home
Mobile

SALE பிச்சிக்கிச்சி.. வெறும் ரூ.11499-க்கு வந்த SAMSUNG போன்.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி (Samsung Galaxy F16 5G) போனின் விற்பனை அறிமுக சலுகையுடன் தொடங்கிவிட்டது. இதுவரையில் கிடைக்காத விலையில் ஃபுல்எச்டிபிளஸ் ரொசொலூஷனுடன் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இதுபோக 5000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி போனுக்கு கிடைக்கும் அறிமுக சலுகை மற்றும் விலை விவரங்கள் இதோ.

சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி பிளிப்கார்ட் விலை (Samsung Galaxy F16 5G Flipkart Price): இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ,12,499ஆக இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,499ஆகவும் இருக்கிறது. இப்போது, ரூ.1000 டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது.

SALE பிச்சிக்கிச்சி.. வெறும் ரூ.11499-க்கு வந்த SAMSUNG போன்.. மாடல்?

இந்த டிஸ்கவுண்ட் ஐசிஐசிஐ பேங்க் டெபிட் கார்டு மற்றும் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. இந்த பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.9,300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.12,499 ஆரம்ப விலைக்கு இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம். பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர்களில் (Samsung Online Store) விற்பனைக்கு கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F16 5G Specifications): இந்த சாம்சங்கில் ஓஎஸ் மற்றும் சிப்செட் ஹை-லைட் அம்சமாக இருக்கிறது. ஏனென்றால், 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஒன் யுஐ 7.0 (One UI 7.0) பேக் செய்துள்ளது.

மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. முன்பே சொன்னதை போல இந்த பட்ஜெட்டில் சூப்பர் அமோலெட் டிஸ்பிளேவை கொடுக்கிறது. ஆகவே, 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) இன்பினிட்டி-யூ சூப்பர் அமோலெட் (Infinity-U Super AMOLED) டிஸ்பிளே உள்ளது.

இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் பெற்று கொள்ளலாம். கலர் அக்யூரசிக்காக 16 மில்லியன் கலர் டெப்த் வருகிறது. மூன்று ரேம் வேரியண்ட்களிலும் 1.5 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5,000mAh பேட்டரி வருகிறது.

இந்த பட்ஜெட்டுக்கு டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மட்டுமே கிடைக்கும் என்று சாம்சங் பிரியர்களே எதிர்பார்த்தாலும், அதைவிட கூடுதலாக டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camers System) இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 10X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், டைப்-சி ஆடியோ மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி வருகிறது. பிளிங் பிளாக் (Bling Black), பிளேசிங் ப்ளூ (Blazing Blue) மற்றும் கிளம் கிரீன் (Glam Green) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு வருகிறது. இந்த பட்ஜெட்டுக்கு கேமரா, டிஸ்பிளே, ஓஎஸ் பீச்சர்கள் கூடுதலாகவே கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F16 5G With 50MP Camera Sale Under Rs 12000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X