Home
Mobile

அவ்ளோ தானா.. ரூ.11,499 போதும்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

சாம்சங் பிரியர்களே அவ்ளோ தானா என்று கேட்கும்படியான பட்ஜெட்டில் டிரெண்ட்டிங் டிசைன் மட்டுமல்லாமல், சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி (Samsung Galaxy F16 5G) போன் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. அடிமட்ட விலையில் 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கொடுப்பதால் வரவேற்பு பட்டையை கிளப்புகிறது. இந்த போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.

சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F16 5G Specifications): இந்த சாம்சங் போனில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த பிளாட் மற்றும் ரவுண்டெட் கார்னர் டிஸ்பிளேவில் 16 மில்லியன் கலர் டெப்த் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

அவ்ளோ தானா.. ரூ.11,499 போதும்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா மாடல்!

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களையும் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ஒன் யுஐ 7.0 (One UI 7.0) மற்றும் மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camers System) கிடைக்கிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடையாது. இருப்பினும், ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் 10X டிஜிட்டல் ஜூமிங் (Digital Zoom) கொடுக்கிறது.

மேலும், ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் மற்றும் எச்டி (HD) ரெசொலூஷன் ஸ்லோவ் மோஷன் ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த சாம்சங் போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்கிறது. இந்த மெமரிக்கு மேல் ஸ்டோரேஜ் சப்போர்ட் கொடுக்க 1.5 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) பேக் செய்துள்ளது. மேலும், டூயல் சிம் சிலாட் இருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5,000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் உள்ளது. 7.9 எம்எம் தடிமன் மற்றும் 191 கிராம் எடையில் காம்பாக்ட் டிசைனை கொடுக்கிறது. இந்த சாம்சங் போனில் டைப்-சி இயர்ஜாக் (Type-C Earjack) கிடைக்கிறது.

ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3), வை-பை 802 (Wi-Fi 802), என்எப்சி (NFC), ஜிபிஎஸ் (GPS) மற்றும் குளோனஸ் (Glonass) போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி போனில் பிளிங் பிளாக் (Bling Black), கிளம் கிரீன் (Glam Green) மற்றும் வைபிங் ப்ளூ (Vibing Blue) ஆகிய கலர்கள் இருக்கின்றன. இந்தியா மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் மார்ச் 13ஆம் தேதி முதல் ஆர்டருக்கு வருகிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.11,499ஆக இருக்கிறது. இந்த விலை அறிமுக சலுகையுடன் கிடைக்கும் விலையாகும். ஆகவே, மார்கெட் விலை கொஞ்சம் கூடுலாக இருக்கும். இந்த 4 ஜிபி மட்டுமல்லாமல், 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்ட்களுக்கும் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F16 5G With 50MP Camera Launched Sale From March 13 on Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X