Home
Mobile

ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.10,749-க்கு சாம்சங்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த பட்ஜெட்டில் சாம்சங் போன் கிடைத்தால், ஆர்டர் போட சொல்லவா வேண்டும் என்பது போல பட்டையை கிளப்பும் விலை குறைப்பில் 50 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி (Samsung Galaxy F16 5G) போன் கிடைக்கிறது. எந்தவொரு கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளும் இல்லாமலேயே விலை குறைப்பில் கிடைப்பதால், விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. இந்த சாம்சங் போன் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F16 5G Specifications): இந்த போனுக்கு ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், 6 ஆண்ட்ராய்டு அப்டேட்களை கொடுத்து ஒட்டுமொத்த சாம்சங் பிரியர்களையும் மிரளவிட்டுள்ளது.

ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.10,749-க்கு சாம்சங்.. 50MP கேமரா.. எந்த போன்?

மேலும், ஒன் யுஐ 7.0 (One UI 7.0) மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் செட்டப் கொடுக்கிறது. 13 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆகவே, கேமராவில் பக்கா அவுட்புட் எதிர்பார்க்க முடியும்.

மேலும், 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. சாம்சங் போன்களின் எல்சிடி டிஸ்பிளேவே பிரீமியமாக அவுட்புட் கொடுக்கும். இதில் பட்ஜெட்டிலும் அமோலெட் டிஸ்பிளே வருவதால், அதைவிட பக்காவாக எதிர்பார்க்கலாம். இருப்பினும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மட்டுமே கிடைக்கிறது.

ஆனால், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கொடுத்து பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

இந்த போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, ஃபாஸ்ட் சார்ஜிங் மீடியம் அவுட்புட் கொடுக்கும். பிளாங் பிளாக் (Bling Black), வைபிங் ப்ளூ (Vibing Blue) மற்றும் கிளாம் கிரீன் (Glam Green) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இப்போது, இந்த சாம்சங் போனின் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ,12,499ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.15,499ஆகவும் இருக்கிறது. இது மார்கெட் விலையாகும். ஆனால், இப்போது விலை குறைப்பில் கிடைக்கிறது.

ஆகவே, 4 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.10,749ஆகவும், 6 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.11,999ஆகவும், 8 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.13,499ஆகவும் இருக்கிறது. இந்த விலைகளில் வாங்கி கொள்ள கிரெடிட் கார்டுகள் அல்லது டெபிட் கார்டுகள் தேவையில்லை. நேரடி விலை குறைப்பில் ஆர்டர் செய்ய முடியும். பிளிப்கார்ட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F16 5G With 4GB RAM Available At Discounted Price in Flipkart Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X