Home
Mobile

அதிருது இந்திய மார்க்கெட்.. 8ஜிபி ரேம்.. ஆண்ட்ராய்டு 14.. வருகிறது புதிய Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி (Samsung Galaxy F16 5G) போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த சாம்சங் போன் BIS சான்றிதழ் தளத்தில் SM-E166P என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி எப்16 5ஜி போனின் சில அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F16 5G Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஒசி (MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

அதிருது இந்திய மார்க்கெட்.. வருகிறது புதிய Samsung 5ஜி போன்..

குறிப்பாக மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி போன் வெளிவரும். மேலும் 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த கேலக்ஸி எப்16 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F15 5G Specifications): 6.5-இன்ச் அளவிலான சூப்பர் அமோஎல்இடி (sAMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன்.மேலும் இதன் டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் ( Dimensity 6100+ Chipset) உடன் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் மேம்பட்ட கேமிங் அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி மெயின் கேமரா + 5எம்பி கேமரா + 2 எம்பி கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் (Triple Rear Camera Setup) சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.

மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்.

அதிருது இந்திய மார்க்கெட்.. வருகிறது புதிய Samsung 5ஜி போன்..

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 13 5ஜி பேண்ட்களுக்கான ஆதரவுடன் (13 5G Bands Support) வருகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் 4 ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates For 4 Years) மற்றும் 5 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை (Security Updates For 5 Years) பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த போன். எனவே சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F16 5G will be launched in India soon: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X