Home
Mobile

ஒளி வந்துவிட்டது.. ரேட் கட்ல Samsung 5ஜி போன்.. 6 OS அப்டேட்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி (Samsung Galaxy F16 5G) ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு கிடைக்கிறது. இந்திய மார்கெட்டில் சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி (Samsung Galaxy F17 5G) ஸ்மார்ட்போன் நேற்று வெளியாகியதால், இது கம்மியான விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி விலை (Samsung Galaxy F16 5G Price): 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,499ஆக இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆகவும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,499ஆகவும் உள்ளது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.10,999 விலைக்கு 4 ஜிபி ரேம் வேரியண்ட் கிடைக்கிறது.

ஒளி வந்துவிட்டது.. ரேட் கட்ல Samsung 5ஜி போன்.. 6 OS அப்டேட்.. மாடல்?

இதன் மூலம் ரூ.1,500 விலை குறைப்பில் வாங்கி கொள்ள முடிகிறது. இதேபோல ரூ.12,249 பட்ஜெட்டில் 6 ஜிபி ரேம் வேரியண்ட் வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை தொடர்ந்து, இந்த விலை குறைப்பு கிடைப்பதால் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பீச்சர்களை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F16 5G Specifications): ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. 6 ஓஎஸ் அப்டேட்கள், 6 வருட செக்யூரிட்டி அப்டேட் கொடுக்கிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் சாம்சங்கின் ஒன் யுஐ 7.0 (One UI 7.0) கிடைக்கிறது. 5ஜி மாடலுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுப்பதற்காக 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. மேலும், மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைப்பதால், அவுட்புட் பக்காவாக இருக்கும்.

இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைத்துள்ளது. இந்த டிரிபிள் ரியர் சிஸ்டமில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடையாது, ஆனால், ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்கிறது. மேலும், 10X டிஜிட்டல் ஜூம் மற்றும் ஃபுல்எச்டி ரெசொலூஷன் கிடைக்கிறது.

13 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆனால், இதில் ஆட்டோ போகஸ் கிடையாது. இப்போது, பேட்டரி பீச்சர்களுக்கு வருவோம். 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த பட்ஜெட்டுக்கு தரமான பேட்டரியே கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட மற்ற பீச்சர்கள் பட்ஜெட் மாடல்களுக்கு ஏற்பவே கிடைக்கின்றன.

இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வழக்கமான டிசைனில் இல்லாமல், டூயல் ஷேட் கொடுக்கும்படி பிளிங் பிளாக் (Bling Black), வைபிங் ப்ளூ (Vibing Blue) மற்றும் கிளம் கிரீன் (Glam Green) கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டைப்-சி ஆடியோ உள்ளிட்ட பீச்சர்களையும் இது கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F16 5G Price in India Dropped After Samsung Galaxy F17 5G Launched
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X