தீபாவளிக்கு இந்த Samsung 5ஜி போனை வாங்குங்க! AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது அமேசான் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போனும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இந்த பதில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போன் முன்பு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் ரூ.11,732 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F16 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உடன் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2340 பிக்சல்கள், 16 மில்லியன் கலர் டெப்த் , 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5000mAh பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3), வை-பை 802 (Wi-Fi 802), என்எப்சி (NFC), ஜிபிஎஸ் (GPS) மற்றும் குளோனஸ் (Glonass) போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
பிளிங் பிளாக் (Bling Black), கிளம் கிரீன் (Glam Green) மற்றும் வைபிங் ப்ளூ (Vibing Blue) ஆகிய நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் எடை 191 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications








