ஆர்டர் பிச்சுக்கும் பாருங்க.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. இந்தியாவுக்கு வரும் சாம்சங் போன்.. எந்த மாடல்?
சாம்சங் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது தற்போது ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி எப்15 எனும் புதிய ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 22-ம் தேதி அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ட்ரிபிள் ரியர் கேமரா, அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்15 அம்சங்கள் (Samsung Galaxy F15 specifications): 6.6-இன்ச் AMOLED டிஸ்பிளே டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எப்15 போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாட்டர்-டிராப் நாட்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்15 ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்15 போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எப்15 ஸ்மார்ட்போனில் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த சாம்சங ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்பேன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த சாம்சங் போன் அறிமுகமாகும்.
அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எப்15 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றி கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எப்15 ஸ்மார்ட்போனில் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும் இந்த போன் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications