Home
Mobile

அள்ளி வீசும் பிளிப்கார்ட்.. ரூ.13,499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Samsung 5ஜி போன்..

இந்தியாவில் சாம்சங் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதுவும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் வெளிவருகின்றன. எனவே இந்தியாவில் சாம்சங் போன் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் சாம்சங் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி (Samsung Galaxy F15 5G) போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளன.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,499 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.13,499 விலையில் வாங்கிவிட முடியும்.

அள்ளி வீசும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் Samsung 5ஜி போன்..

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F15 5G Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் ( Dimensity 6100+ Chipset) உடன் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் மேம்பட்ட கேமிங் அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் ஆனது 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி கேமரா + 2 எம்பி கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் (Triple Rear Camera Setup) சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.

இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக 6.5-இன்ச் அளவிலான சூப்பர் அமோஎல்இடி (sAMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன்.மேலும் இதன் டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அள்ளி வீசும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் Samsung 5ஜி போன்..

அதேபோல் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 13 5ஜி பேண்ட்களுக்கான ஆதரவுடன் (13 5G Bands Support) வருகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் 4 ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates For 4 Years) மற்றும் 5 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை (Security Updates For 5 Years) பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6000mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த போன். எனவே சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F15 5G with 6GB RAM price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X