Home
Mobile

ஒருத்தனும் கொடுக்க மாட்டான்.. இவ்ளோ கம்மி விலைக்கு.. 13 5G பேண்ட்ஸ், 12GB ரேம், 6000mAh பேட்டரி, 1TB மெமரி!

12ஜிபி வரையிலான ரேம், 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், 6000எம்ஏஎச் பேட்டரி, 6.5-இன்ச் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே, 5ஜி ஆதரவு உட்பட, பல முக்கிய அம்சங்களை பேக் செய்யும் ஒரு புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் இன்று (மார்ச் 4) இந்தியாவில் அறிமுகமானது.

சொன்னபடியே சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனாக கேலக்ஸி எப்15 5ஜி (Samsung Galaxy F15 5G) மாடல் இந்தியாவில் அறிமுகமானது. இன்று (மார்ச் 4) இரவு 7 மணி முதலே விற்பனையை தொடங்கவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை என்ன? அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:

Samsung Galaxy F15 5G அறிமுகம்: விலை & அம்சங்கள்!

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? சாம்சங்கின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் அளவிலான சூப்பர் அமோஎல்இடி (sAMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 6100+ Chipset) மூலம் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ரேம் பிளஸ் (RAM Plus) தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதன்கீழ் ஸ்மார்ட்போனின் இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து ரேம்-ஐ கடனாக பெற்று ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த ரேம்-ஐ 12ஜிபி வரை அதிகரிக்க முடியும். மேலும் இது 128ஜிபி இன்டர்னல் ஸ்டரோஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதல் மெமரிக்கு 1டிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட்டும் இதில் உள்ளது.

Samsung Galaxy F15 5G அறிமுகம்: விலை & அம்சங்கள்!

கேமராக்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) உள்ளது அதில் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி கேமரா + 2 எம்பி கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 13எம்பி செல்பீ கேமரா உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 13 5ஜி பேண்ட்களுக்கான ஆதரவுடன் (13 5G Bands Support) வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4 ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates For 4 Years) மற்றும் 5 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை (Security Updates For 5 Years) பெறும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. கடைசியாக இது 6000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

Samsung Galaxy F15 5G அறிமுகம்: விலை & அம்சங்கள்!

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி-யின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷகள் மற்றும் 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி மாடலானது ரூ.11,XXX-க்கு (அதாவது ரூ.11,000 பட்ஜெட்டில்) வாங்க கிடைக்கும் என்று குறிப்பிடுகிறது. இது அறிமுக சலுகையாக இருக்கும் அல்லது பேங்க் டிஸ்கவுண்ட் ஆக இருக்குமா என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை.

இன்று (மார்ச் 4) இரவு 7 மணிக்கு தொடங்கும் ஏர்லி சேல்-ன் (Early Sale) போது, சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி மீதான அறிமுக சலுகை விலை வெளிப்படுத்தப்படலாம். மேலும் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி-யின் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ஆஷ் பிளாக் (Ash Black), க்ரூவி வயலெட் (Groovy Violet) மற்றும் ஜாஸி க்ரீன் (Jazzy Green) கலர்களில் விற்பனைக்கு வரும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ (Samsung Galaxy S24 FE) ஸ்மார்ட்போனும் கூட கூடிய விரைவில் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. ஆனால் சரியான வெளியீட்டு தேதி குறித்த விவரம் எதுவும் இல்லை. இந்தியாவில் இது ரூ.59,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F15 5G Launched in India Check Price Specifications Sale Offer Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X