Samsung சைலண்ட் சம்பவம்.. ரூ.8,999 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. புதிய போன் அறிமுகம்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எப்14 (Samsung Galaxy F14) போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி போன் ஆனது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதன் 4ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எப்14 அம்சங்கள் (Samsung Galaxy F14 Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்14 போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2400 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 (Qualcomm Snapdragon 680) சிப்செட் வசதியுடன் இந்த புதிய சாம்சங் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU)கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன்.
குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்14 போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளன.
50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.
OneUI 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்ப அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல்சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவுடன் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் போன்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்14 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இதன் பேட்டரி சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ( 25 wired fast charging) வசதியும் உள்ளது.

டூயல் சிம் (Dual SIM), 4ஜி எல்டிஇ (4G LTE), வைஃபை 5 (WiFi 5), புளூடூத் 5.1 ( Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 போன் வெளிவந்துள்ளது. மூன்லைட் சில்வர் (Moonlight Silver) மற்றும் பெப்பர்மிண்ட் கிரீன் (Peppermint Green) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். குறிப்பாக இந்த போனில் எல்இடி பிளாஷ் ஆதரவும் உள்ளது.
4ஜிபி ரேம் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்14 போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. அமேசான், சாம்சங் இணையதளம், பிளிப்கார்ட் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வருகிறது இந்த புதிய போன். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் கம்மி விலையில் இந்த போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








