சைலன்ட் ஆக விலை குறைப்பு.. 6000mAh பேட்டரி, 50எம்பி கேமரா.. கம்மி விலையில் சாம்சங் 5ஜி போன்..
சாம்சங் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான அம்சங்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு 5ஜி போன்களை அறிமுகம் செய்கின்றன. எனவே தான் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி (Samsung Galaxy F14 5G) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 4ஜிபி ரேம் + 128ஜிபி கொண்ட கேலக்ஸி எ14 5ஜி மாடல் ரூ.14,490 விலையிலும், இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.15,990 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது விலைகுறைப்பு மூலம் 4ஜி ரேம் கொாண்ட கேலக்ஸி எப்14 5ஜி மாடலை ரூ.13,990 விலையிலும், பின்பு இதன் 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்டை ரூ.14,990 விலையிலும் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாம்சங் ஷாப் செயலியில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் பெறமுடியும். இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
எக்ஸிநோஸ் 1330 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் OneUI சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி போன். 50எம்பி பிரைமரி கேமரா சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் 5ஜி போன். எனவே இந்த போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளது. சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5., ஜிபிஎஸ், யுஎஸ்எபி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனின் எடை 205 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கம்மி விலையில் இந்த போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications