Home
Mobile

அப்படி போடு: 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட 5ஜி போனை ரூ.12,990-விலையில் அறிமுகம் செய்த Samsung.!

சாம்சங் நிறுவனம் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய கேலக்ஸி எப்14 5ஜி 6000 எம்ஏஎச் பேட்டரி, பெரிய டிஸ்பிளே, அட்டகாசமான கேமரா எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த சாம்சங் போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இப்போது சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

6000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட புதிய 5ஜி போனை அறிமுகம் செய்த Samsung.!

குறிப்பாக எக்ஸிநோஸ் 1330 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். அதேபோல் OneUI சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் 5ஜி போன். எனவே இந்த போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

6000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட புதிய 5ஜி போனை அறிமுகம் செய்த Samsung.!

6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்எபி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போனின் எடை 205 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பர்பில், கிரீன், பிளாக் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

6000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட புதிய 5ஜி போனை அறிமுகம் செய்த Samsung.!

அறிமுக சலுகையாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.12,990-விலையில் வாங்க முடியும். பின்பு இதன் 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் ரூ.14,990-க்கு வாங்க கிடைக்கும். குறிப்பாக மார்ச் 30-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் தளங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். அதேபோல் இந்த போனுக்கு வழங்கப்பட்ட அறிமுக சலுகை சில நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F14 5G phone with 6000mAh battery launched at Rs 12,999: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X