Home
Mobile

அப்படி போடு.. ரூ.9,990 போதும்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் இயர் எண்ட் சேல் (Year End Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் 5ஜி போனுக்கு ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் தற்போது சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தான் 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை ரூ.11,490 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும்.

அப்படி போடு.. ரூ.9,990 போதும்.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

எனவே ரூ.9990 இருந்தால் போதும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போனை தற்பேர்து வாங்கிவிட முடியும். குறிப்பாக இந்த போன் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி அம்சங்கள் (SAMSUNG Galaxy F14 5G Specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஒரு தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

அப்படி போடு.. ரூ.9,990 போதும்.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

எக்ஸிநோஸ் 1330 ஆக்டோ-கோர் பிராசஸர் (Exynos 1330 Octa Core Processor) வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் OneUI சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸலாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி போன். எனவே இந்த போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் 5ஜி போன்.

அப்படி போடு.. ரூ.9,990 போதும்.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மேலும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் 5ஜி போன்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்எபி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது. பின்பு இந்த போனின் எடை 205 கிராம். குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குறைந்த விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F14 5G is available at 34 percent discount on Flipkart: check new price: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X