Home
Mobile

ஆளுக்கு 2 அள்ளி போடுங்க.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. சாம்சங் 5ஜி போனுக்கு ஆஃபர்.. எந்த மாடல்?

அக்டோபர் 8-ம் தேதி பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்க உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த விற்பனையில் சாதனங்களை வாங்கினால் கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.

அதேபோல் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மிகவும் எதிர்பார்த்த சாம்சங் 5ஜி போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். அதாவது சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி போன் ஆனது தற்போது ரூ.12,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையின் போது இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி போன் ரூ.10,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. சாம்சங் 5ஜி போனுக்கு ஆஃபர்..

அதாவது தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகள் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி போன் ரூ.10,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி போனின் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி அம்சங்கள்: எக்ஸிநோஸ் 1330 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். அதேபோல் OneUI சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் 5ஜி போன். எனவே இந்த போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. சாம்சங் 5ஜி போனுக்கு ஆஃபர்..

6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்எபி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போனின் எடை 205 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பர்பில், கிரீன், பிளாக் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். அதேபோல் 5ஜி ஆதரவு, 50எம்பி கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் விற்பனைக்கு வரும் என்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
SAMSUNG Galaxy F14 5G available under Rs 10,000 during Flipkart Big Billion Days Sale: check details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X