Samsung Galaxy F13: இப்படியொரு சாம்சங் போனுக்காக தான் வெயிட்டிங்.! எப்போது அறிமுகம் தெரியுமா?
சியோமி, விவோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விட சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு தான் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக சாம்சங் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது.

எப்போது அறிமுகம்?
அதன்படி சாம்சங் நிறுவனம்பட்ஜெட் விலையில் புதிய சூப்பர் சாம்சங் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் ஜூன் 22-ம் தேதி மிகவும் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி எப்13 (Samsung Galaxy F13)ஸ்மார்ட்போனை தான் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்யஉள்ளது.

பிளிப்கார்ட் மற்றும் சாம்சங்
குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக
சாம்சங் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த புதிய ஸ்மார்ட்போனின் சில தகவல்கள் வெளிவந்துள்ளது.

6000 எம்ஏஎச் பேட்டரி
இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன்; ஆனது ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.எனவே சிறந்த பேட்டரி பேக்கப் கொண்ட ஸ்மார்ட்போனை தேடும் பயனர்கள் இதை தேர்வு செய்வது நல்லது.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/56ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று
கூறப்படுகிறது. பின்பு மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ஏற்கனவே கீக்பெஞ்ச் தளத்தில் வெளியான தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் எக்ஸினோஸ் 850 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேலக்ஸி எப்13ஸ்மார்ட்போன்.

இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது
மேலும் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன். அதேபோல் நீங்கள் ரூ.17,000-க்கு
கீழ் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் இந்த சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி சாதனத்தை பாருங்கள். இப்போது கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி
சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2408 x 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 சிப்செட் வசதி உள்ளது.எனவே கேமிங் ஆப் உட்பட அனைத்து ஆப்களையும் தடையில்லாமல் பயன்படுத்த முடியும்.

128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி
மேலும் இந்நிறுவனத்தின் One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன்.

50எம்பி பிரைமரி கேமரா
கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனில் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா +2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள்பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எப்23 5ஜிஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி
கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார், பவர் கூல் தொழில்நுட்பம்போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல இணைப்பு
ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எப்23 5ஜிஸ்மார்ட்போன்.

பட்ஜெட் விலை
கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன் முதலில் அக்வா ப்ளூ மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் நிறங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது காப்பர் ப்ளஷ் நிறங்களிலும்இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. பின்புஇதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








